Home இலங்கை சமூகம் சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினால் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினால் கவனயீர்ப்பு போராட்டம்

0

சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் எதிர்வரும்,  01.10.2024 அன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கவுள்ளது.

தொடர்ச்சியாக எமது போராட்டமானது மாதத்தின் இறுதி நாளாகிய 30 ஆம் திகதி
நடைபெற்று வருகின்ற நிலையில், இம்மாதம் அதாவது 30.09.2024
அன்று நடைபெற இருக்கின்ற போராட்டம் 01.10.2024 முதலாம் திகதி சிறுவர் தினமான
அன்று முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, வடக்கு – கிழக்கு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி
கலாரஞ்சினி போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

விமான தாக்குதல்

இறுதி யுத்தத்தின்போது பல சிறார்கள் செல்விச்சிக்கலாலும் விமான தாக்குதலும்
கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள போதும் ஒரு சில சிறார்கள்
இராணுவத்தினிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கான நீதி இதுவரையும்
கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றை வலியுறுத்தி இச்சிறுவர் தினத்தை முன்னிட்டு
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை
முன்னெடுக்க உள்ளனர்

அத்துடன் இப்போராட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட
அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் – எரிமலை

NO COMMENTS

Exit mobile version