Home இலங்கை சமூகம் திருமலையில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம்

திருமலையில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம்

0

யாழ்ப்பாணம் (Jaffna)- செம்மணியில் உயிர்நீர்த்த உறவுகளுக்காக மக்களால் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு
போராட்டம் திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை (Trincomalee) – சிவன் கோவிலடியில் நேற்று (25) மாலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

”தமிழின அழிப்பின் சாட்சியாக கிடக்கிறது செம்மணி“ என்பதை கூட்டுக்குரலாக
ஒலிக்கச் செய்வோம் எனும் தொனியின் கீழ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி கவனயீர்ப்பு போராட்டம்

இதன்போது ஒளிச்சுடர் ஏற்றி கோசமிட்டு செம்மணி ஆதரவு
கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

குறித்த போராட்டத்தில் திருகோணமலையைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என
பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாள் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version