Home இலங்கை சமூகம் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்! திருகோணமலையில் கையெழுத்திடும் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்! திருகோணமலையில் கையெழுத்திடும் போராட்டம்

0

திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (14) காலை எதிர்புப் பதாகையில்
கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

கையெழுத்திடும் போராட்டம்

இன்னுமொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம் – பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்,காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, அனைத்து தேசிய
இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்புக்காய்
போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்த கையெழுத்து போராட்டத்தில் அதிகளவான
பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டதையும் காணமுடிந்தது.

NO COMMENTS

Exit mobile version