Home இலங்கை சமூகம் இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரையில் போராட்டம்

இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரையில் போராட்டம்

0

வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணைகள் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைத்தல் போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் நோக்கத்துடன் வாகரையின் இயற்கை வளங்களை அழிக்கும் அதிகாரத்தை யார் உமக்கு கொடுத்தது என்ற தொனிப்பொருளில் மாபெரும் போராட்டம் கதிரவெளி பிரதேசத்தில் நடைபெற்றது.

பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டமானது கட்டுமுறிவு சந்தியில் இருந்து ஆரம்பமாகி கதிரவெளி தபால் கந்தோரை வரை சென்றடைந்தது.

எதிர்ப்பு நடவடிக்கை 

பல்வேறுபட்ட கோஷங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பு வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் ஊர்வலமாக நடந்து சென்று தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

ஆளுநரே கடற்றொழிலாளரின் வாழ்வாதரத்தை அழிக்காதே, நன்ணீரை கெடுத்து எமது கண்ணீரில் குழிக்காதே.வாகரையின் அழிவிற்கு விதை போடும் இறால் பண்ணைத் திட்டம் வேண்டாம். அபிவிருத்தி என்ற போர்வையில் எமது வளங்களை அழிக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

குறித்த திட்டங்களை நிறுத்தம் செய்யும் முகமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தொயிப்படுத்தும் 1000 கடிதங்களை அனுப்பும் திட்டத்தில் ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டோர்களின் கையொப்பம் அடங்கிய கடிதம் கதிரவெளி தபால் கந்தோர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version