Home இலங்கை சமூகம் வசந்தவே பதில் கூறவேண்டும்! மிதிகம பகுதியில் வீதிக்கிறங்கிய ஊழியர்கள்

வசந்தவே பதில் கூறவேண்டும்! மிதிகம பகுதியில் வீதிக்கிறங்கிய ஊழியர்கள்

0

மிதிகம பகுதியில் உள்ள ஒரு டயர் உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையை வேறொரு தரப்பினருக்கு மாற்றுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது புதிய முதலீட்டாளர் வெளியேற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலையீட்டின் காரணமாக இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கை

மேலும், தங்கள் வேலைகள் பாதுகாக்கப்படும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடரப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் மாற்றத்ததிற்காக தேசிய மக்கள் சக்தியை தேர்தலில் ஆதரித்ததாகவும், ஆனால் அமைச்சர் வசந்த சமரசிங்க என்ற டீல் வசந்தவின் செயற்பாட்டால் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version