சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி முல்லைத்தீவில் (Mullaitivu) மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் (26) போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் முல்லைத்தீவிலும் குறித்த போராட்டம் நடைபெற்றது.
சர்வதேச நீதி
“தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்“ என்ற வாகசங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறிவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
