Home இலங்கை சமூகம் 3000 நாட்களை கடந்த தமிழ் மக்களின் கோரிக்கை : இன்றுவரை வீதியில் நிற்கும் அவலம்

3000 நாட்களை கடந்த தமிழ் மக்களின் கோரிக்கை : இன்றுவரை வீதியில் நிற்கும் அவலம்

0

வவுனியாவில், தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் (07) மூவாயிரமாவது நாளை குறித்த போராட்டம் எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதிப்போரின் போதும்,அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின்
உண்மை நிலையினை வலியுறுத்தி தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை
உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

போராட்டம் 

குறித்த போராட்டம் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் (07) மூவாயிரம் நாட்களை கடக்கின்ற
நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஐரோப்பிய அமெரிக்க
கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தங்களுக்கு சர்வதேசநீதி வேண்டும் என்பதை
வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version