எதிர்வரும் 26ம் திகதி அனைத்து வடக்கு மாகாண அதிபர்களையும் சுகவீன விடுமுறை
அறிவித்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்து அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க
அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு
இலங்கை அதிபர் சேவை சங்க
வட மாகாண இணைப்பாளர் ஜெ.வோல்வின் அழைப்பு விடுத்தார்.
நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை
கோரியும், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் மாணவர்களுடைய
போசாக்கு பிரச்சினைகள் ஆகிய கோரிக்கைகளை உள்வாங்கி எதிர்வரும் 26ம் திகதி
போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் அனைத்து வடமாகாண அதிபர்களையும் சுகவீன விடுமுறை அறிவித்து
போராட்டத்துக்கு வலுச்சேர்த்து அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அரசுக்கு
அழுத்தம் கொடுக்க ஒன்றிணைந்து போராட வடமாகாண அனைத்து அதிபர்களையும்
இணையுமாறு இலங்கை அதிபர் சேவை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.