Home முக்கியச் செய்திகள் நுகேகொடையில் ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : மதத் தலைவர்களும் பங்கேற்பு! (நேரலை)

நுகேகொடையில் ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : மதத் தலைவர்களும் பங்கேற்பு! (நேரலை)

0

புதிய இணைப்பு

நுகேகொடையில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் மதத்தலைவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

அதன்படி, பௌத்த தேரர்கள், இந்து மதத்தலைவர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களும் கலந்துக்கொண்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

முதலாம் இணைப்பு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்க்கட்சியின் கூட்டிணைந்த பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் குறித்த பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேரணியில் அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள் உட்பட பல சிவில் அமைப்புகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பேரணி

அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, பொதுஜன ஐக்கிய முன்னணி, சிறிலங்கா மக்கள் கட்சி, மக்கள் சேவை கட்சி, ஐக்கிய முன்னணி உட்பட 17க்கும் மேற்பட்ட வெகுஜன அமைப்புக்கள் இந்த பொதுப் பேரணியில் பங்கேற்கவுள்ளன.

இந்தப் பொதுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரள, பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ, சிறிலங்கா சுதந்திர முன்னணியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார, மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன, மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பிரேமநாத் சி.தொலவத்த, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட அந்த அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுப் பேரணிக்கு மக்கள் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், சிறிலங்கா பொதுஜனா பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் பேரணிக்கு வருகைத் தருவதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

https://www.youtube.com/embed/sB90LhZ0dFk

NO COMMENTS

Exit mobile version