Home இலங்கை சமூகம் ஆவணங்களுக்கு ரசீதை வழங்குங்கள்: அமைச்சின் அறிவிப்பு வெளியானது

ஆவணங்களுக்கு ரசீதை வழங்குங்கள்: அமைச்சின் அறிவிப்பு வெளியானது

0

நேரடியாக பெற்றுக்கொள்ளப்படும் மற்றும் அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளப்படும்
ஆவணங்களுக்காக, பொது மக்களுக்கு ரசீது ஒப்புகை வழங்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை உறுதி செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சகம், ஏனைய அமைச்சகங்கள்
மற்றும் அரசு நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.

ஆவணங்களை கையாள்வது

பொது நிறுவனங்களுக்கு கையால் வழங்கப்படும் ஆவணங்களை கையாள்வது குறித்து
வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களால் அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு ஆவணங்கள் நேரடியாக
கையளிக்கப்படுகின்றன.

அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படுகின்றன.

ரசீது ஒப்புகை

ஆனால் அத்தகைய ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் போது அரச நிறுவனங்கள், ரசீது
ஒப்புகையை வழங்குவதில்லை என்ற விடயத்தை பொது நிர்வாக அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version