Home இலங்கை அரசியல் மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம்..

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம்..

0

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த வேண்டும் என்ற முடிவில்
அமைச்சரவையும் உறுதியாக உள்ளது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன
நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனினும், எந்த முறைமையில் தேர்தல் நடத்தப்படும் என்பது பற்றி
முடிவெடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, புதிய அரசமைப்பு இயற்றப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியால்
வழங்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேற்றப்படும் என்றும், அதற்கான கால எல்லையைச்
சரியாகக் குறிப்பிட முடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version