கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையானது நேற்றையதினமும், இன்றையதினமும் பெய்த கனமழை
காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பச்சிலைப்பள்ளி பொது சந்தைக்கு மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி
செய்வதற்காக தினமும் வருகை தருவது வழக்கமாகும்.
வெள்ளத்தால் நெருக்கடி
வெள்ளம் காரணமாக இன்றையதினம் சந்தைக்கு வந்த மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
பல காலமாக தாம் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகவும் தமது பிரதேசத்தில்
சிறியளவு மழை பெய்தாலும் பொதுச் சந்தை காணப்படும் பிரதேசத்தில் தாம் தமது
அன்றாட செயல்பாடுகளை தொடர முடியாத நிலை இருப்பதாகவும் வெள்ளத்தினை
கட்டுப்படுத்த ஏதாவது உடனடி நடவடிக்கையை செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
