Home இலங்கை சமூகம் வெருகல் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுங்கள்! நிவாரணம் கிடைக்காததால் வீதிக்கிறங்கிய பொதுமக்கள்

வெருகல் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுங்கள்! நிவாரணம் கிடைக்காததால் வீதிக்கிறங்கிய பொதுமக்கள்

0

திருகோணமலை – வெருகல் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று
சனிக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் பொதுமக்கள் சிலர் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தை பிரதேச செயலாளர் இன்னும் தமக்கு
வழங்காதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறும் ஆர்ப்பாட்டகாரர்களால் கேரப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரின் கருத்து 

இதன் பின்னர் குறித்த இடத்திற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
W.G.M ஹேமந்தகுமார வருகைதந்து பொதுமக்கள் மத்தியில் கருத்துக்களை கேட்டறிந்துக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

“அரச உத்தியோகத்தர்கள் வெள்ள நிலைமை ஏற்பட்டதன் பின்னர் சுமார் இரண்டு மூன்று
மணித்தியாலங்களை தூங்குகின்றனர். உங்களுக்காகவே சேவையாற்றுகின்றனர்
.

வெளிநாடுகளில் இருந்து வந்த உதவிகள் சகல பிரதேச செயலகங்களுக்கும் இப்போதுதான்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் அவ்விடத்தில் இருந்து வெளியேற
முற்பட்டபோது வெருகல் பிரதேச செயலகத்தின் இரண்டு நுழைவாயில்களையும் பொதுமக்கள்
மறித்து பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யாது இவ்விடத்திலிருந்து
வெளியேற முடியாது என தடுத்தனர்.

இதன் பின்னர் இது விடயத்தில் ஆராய்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்ததை
அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

செய்தி – புஹாரிஸ்

NO COMMENTS

Exit mobile version