Courtesy: சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவிலிருந்து கொக்குளாய் வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்து சேவை
சீரான முறையில் இடம் பொறாமையினால் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அரச
ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு
வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலையில் இருந்து முல்லைத்தீவு
கொக்குளாய் சாலையில் ஒரிரு பேருந்துகளே நாளாந்த போக்குவரத்து சேவையை
மேற்கொண்டு வருகிறது.
அண்மைக்காலமாக முல்லைத்தீவிலிருந்து கொக்குளாய் வழித்தடத்தில் இடம்பெறும்
போக்குவரத்துச் சேவைகள் சீராக இடம் பொறாமையினால் மக்கள் மற்றும் பாடசாலை
மாணவர்கள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீரான போக்குவரத்து
குறித்த போக்குவரத்துச் சேவைகள் சீரான முறையில் இடம் பொறாமையினால் பாடசாலை
மாணவர்கள், வயோதிபர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் காத்துக்
கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பருவகாலச் சீட்டு பெற்று பயணத்தை செய்யும் பயணிகள் சாரதி மற்றும்
நடத்துனர்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு சாலை அதிகாரிகள் தொடர்ச்சியாக அசமந்த
போக்குடன் நடந்து கொள்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விசேடமாக மாலை வேளையில் வேலை முடிந்து வீடு செல்லும் நேரம் வருகை தரும்
பேருந்துகள் திடீர் திடீரென இடைநிறுத்தப்படுகிறது.
எனவே குறித்த பகுதி மாணவர்கள் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த
போக்குவரத்து சேவையை உரிய முறையில் மேற்கொள்ள முல்லைத்தீவு சாலை அதிகாரிகள்
முன் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.