மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த விடயத்தை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இயக்குநர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம்
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் இயக்குநர் ஜெயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.