Home இலங்கை சமூகம் கேப்பாபிலபு முல்லைத்தீவிற்கு செல்லும் வீதி தற்காலிக புனரமைப்பு..

கேப்பாபிலபு முல்லைத்தீவிற்கு செல்லும் வீதி தற்காலிக புனரமைப்பு..

0

முல்லைத்தீவு நகருக்கான தற்காலிக பிரதான வீதியாக புதுக்குடியிருப்பு
கேப்பாப்பிலவு வீதியில் உள்ள பாரிய குழி தற்காலிகமாக இன்று (01) மாலை
புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதான வீதியான முல்லைத்தீவு வட்டுவாகல்
பாலம் வெள்ள அனர்த்தம் காரணமாக இரண்டாக பிழந்து கடுமையாக சேதமடைந்துள்ளமையால்
இந்த பாதை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக புனரமைப்பு 

எனவே விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளிலிருந்து பரந்தன் வீதியூடாக
முல்லைத்தீவு நோக்கிப் பயணம் செய்பவர்கள் மாற்று வழியாக கேப்பாப்பிலவு
வீதியைப் பயன்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்
பிரிவினர் இன்று அறிவித்திருந்த நிலையில் கேப்பாபிலவு கள்ளியடி கோஸ்வேவீதி
மழைநீரினால் அரிக்கப்பட்டு பெரிய வாகனங்கள் செல்லமுடியாது சேதமடைந்திருந்தது.

இதனையடுத்தே குறித்த வீதி தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த புனரமைப்பு பணியானது Rdd பொறியியலாளரின் மேற்பார்வையில்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஜேசிபி இயத்திரத்தின் மூலம் புனரமைப்பு பணி
இடம்பெற்றிருந்தது.

அதனை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் ,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், பிரதேச சபை
உறுப்பினர் அ.சற்குணதாஸ் ஆகியோர் பார்வையிட்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version