Home இலங்கை சமூகம் புல்மோட்டை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கனிய மணல் ஊழியர்கள்!

புல்மோட்டை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கனிய மணல் ஊழியர்கள்!

0

திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று (24.12.2026)பணி
பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் .

அதன்படி, குறித்த பணி பகிஷ்கரிப்பில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
ஈடுபட்டனர்.

வருட இறுதியில் ஊழியர்களுக்கு கிடைக்க இருந்த பல கொடுப்பனவுகள்
நிறுத்தப்பட்டதன் காணமாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக ஊழியர்கள்
கருத்து தெரிவித்தனர்.

வேலை நிறுத்தம்

இன்று (24.12.20525) மாலைக்குள் ஊழியர்களுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் வேலை நிறுத்த
போராட்டத்தை தொடரப்போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்
கிழமைக்குள் தீர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும், இன்றைய தினம் (24.12.2025) கனிய மணலை ஏற்றுவதற்கு இடமளிக்கவில்லை எனவும்
இதன் போது ஊழியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version