திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று (24.12.2026) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 300 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள்
ஈடுபட்டிருந்தனர்.
வருட இறுதியில் ஊழியர்களுக்கு கிடைக்க இருந்த பல கொடுப்பனவுகள்
நிறுத்தப்பட்டதன் காரணமாக தாம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
தீர்வு
இன்று மாலைக்குள் ஊழியர்களுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் வேலைநிறுத்த
போராட்டத்தை தொடரப்போவதாக ஊழியர்கள் கூறியிருந்தனர்.
எனினும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தீர்வு தருவதாக அறிவித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை
கைவிட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
