Home இலங்கை அரசியல் பட்டலந்த விவகாரத்தில் அநுரவின் முக்கிய நகர்வு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பட்டலந்த விவகாரத்தில் அநுரவின் முக்கிய நகர்வு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0

பட்டலந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டப்பூர்வமாக தண்டிக்க ஜனாதிபதி விரைவில் ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பார் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் மிகவும் சிறந்த குழுவொன்றே நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை மீதான விவாதம்

அத்தோடு, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து சட்டமா அதிபருக்கும் அறிவிக்கப்படும் எனதெரிவித்த அமைச்சர் பிமல், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, எதிர்வரும் மே மாதம் குறித்த விவாதம் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version