Home இலங்கை குற்றம் நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

தனது நண்பியின் நிர்வாண காணொளி காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிரபோவதாக மிரட்டிய
குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த இளைஞனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க கொழும்பு கூடுதல் நீதவான் மஞ்சுள ரத்நாயக்க
உத்தரவிட்டார்.

அந்த இளம் பெண், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அளித்த
முறைப்பாட்டின் அடிப்படையில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.

விளக்கமறியல்

சந்தேக நபர் வட்ஸ்அப் மூலம் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி
தன்னை மிரட்டியதாக குறித்த பெண் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் இரு தரப்பு சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதவான், பிணை மனுவை
நிராகரித்து, சந்தேக நபரை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிட்டார்.

NO COMMENTS

Exit mobile version