இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம் எனும்
கருப்பொருளிலான செயற்திட்டம் இன்று(13) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி
வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான குழுவினர்
புகையிரதம் மூலம் இன்று13) பிற்பகலில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
கிளீன் சிறீலங்கா பணிப்பாளர்களான தசூன் உதார ,துலீப் சேமரத்தன மற்றும் சாரதா
உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர்களுக்கு யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தில்
வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடருந்தில் வந்த குழுவினரால்
வரவேற்பு நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்,
நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட செயலர் ம.பிரதீபன், புகையிரத
நிலைய அதிபர் பிரதீபன், யாழ்பாண பிரதேச செயலர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டு தொடருந்தில் வந்தோரை வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து தொடருந்தில் வந்த குழுவினரால் யாழ்ப்பாண தொடருந்து நிலையத்திற்கான தொலைக்காட்சி பெட்டியொன்றையும் அன்பளிப்பு செய்தனர்.
