Home சினிமா தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் புஷ்பா 2.. இதுவரை எவ்வளவு என்று தெரியுமா

தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் புஷ்பா 2.. இதுவரை எவ்வளவு என்று தெரியுமா

0

புஷ்பா 2

கடந்த 5ஆம் தேதி வெளிவந்து தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2. இப்படத்தின் மாபெரும் வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், அல்லு அர்ஜுனின் கைது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.

புஷ்பா 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், அல்லு அர்ஜுன் வந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

11 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இதன் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர். பின் ஒரே நாளில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.

தமிழக வசூல் விவரம்

உலகளவில் புஷ்பா 2 படத்தின் வசூல் நாளுக்கு நாள் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 தமிழ்நாட்டில் 11 நாட்களில் ரூ. 64 கோடி வசூல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version