Home இலங்கை சமூகம் மாவீரர் நாளை அனுஷ்டிக்க எழுச்சி பெறும் புதுக்குடியிருப்பு நகரம்

மாவீரர் நாளை அனுஷ்டிக்க எழுச்சி பெறும் புதுக்குடியிருப்பு நகரம்

0

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு
ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி
வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால்
அனுஸ்ரிக்கப்படவுள்ளது.

இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள்

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப்
பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியினை லண்டன் புலம்பெயர் தேசத்து
உறவுகளும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கமும் புதுக்குடியிருப்பு வாழ்
உறவுகளும் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.

NO COMMENTS

Exit mobile version