Home உலகம் போர் பதற்றத்தின் மத்தியில் இந்தியா செல்லும் புடின்…

போர் பதற்றத்தின் மத்தியில் இந்தியா செல்லும் புடின்…

0

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  அரசுமுறை பயணமாக அடுத்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிக்ஸ் மாநாடு சமீபத்தில் நடந்தபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உக்ரைன் உடனான மோதல் குறித்து பேசிய மோடி, இந்தியாவிற்கு வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் புடின் அரசுமுறை பயணமாக அடுத்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா செல்லும் புடின்

இதுதொடர்பாக கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ கூறுகையில், “இந்தியா-ரஷ்யா இடையே நல்ல நட்புறவு உள்ளது.

புடினின் இந்தியா வருகை குறித்து அட்டவணைகளில் உள்ளது. ஜனாதிபதி புடின் இந்தியா வரும் திகதிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் புடின் போர் நிறுத்தம் குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

உக்ரைன் உடனான மோதல் தொடங்கியதில் இருந்து புடின் முதல் இந்தியா வருகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version