புத்தளம் (Puttalam) – உடப்புவ பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பதற்காக கடலில் போட்ட ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள “வெண்கட பறவா“ என்ற பாரை மீன்கள் சிக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மீன்பிடி பருவகாலம் தொடங்கியுள்ள நிலையில், உடப்புவவில் உள்ள கத்தமுட்டு வலையில் 15,000 கிலோ பாரை மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலையில் சிக்கிய மீன்கள்
நேற்று மதியம் கரை வலையில் மீன் பிடித்த போது, கத்தமுட்டு வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் வலை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.
ஒரு வலையில் அதே போன்று செய்த பிறகு, வெண்கட பறவா மீன்கள் வலையிலிருந்து தப்பி கடலுக்குத் திரும்புவதைத் தடுக்க காளிநாதன் மற்றும் சிரி என்ற இரண்டு வலைகள் விரைவாகப் பயன்படுத்தப்பட்டதன் மூலம் இந்த மிகப்பெரிய மீன்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை நாட்டில் இரண்டு வாரங்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக, வலை மற்றும் பிற கடற்றொழிலாளர்களால் குறிப்பிடத்தக்க அளவு மீன்களைப் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
