Home இலங்கை குற்றம் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

பாதுகாவலரை கொலை செய்துவிட்டு 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

0

புத்தளம் பகுதியில், தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையத்தின் பாதுகாவலொருவர் அடித்துக் கொலை செய்யப்டுள்ளதுடன், 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று(11) மாலை சந்தேகநபர் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது, சிலாபம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய காவலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸார் விசாரணை

கடந்த 10ஆம் திகதி இரவு பாதுகாப்பு கடமைகளில் இவர் ஈடுபட்டிருந்ததாகவும், மறுநாள் காலை அவர் தலையில் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும் குறித்த  தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அந்த நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,  இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை முந்தலம் பொலிஸ் நிலைய அதிகாரிகள்  நேற்று மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version