Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் வாகனங்களை தர பரிசோதனை செய்த பொலிஸார்!

கிளிநொச்சியில் வாகனங்களை தர பரிசோதனை செய்த பொலிஸார்!

0

கிளிநொச்சி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் தரம் தொடர்பிலான
பரிசோதனை நடைபெற்றுள்ளது.

இன்று (22)மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் இணைந்த வகையில் இந்த பரிசோதனையை முன்னெடுத்தனர்.

வழக்கு பதிவு 

இன்றைய தினம் கிளிநொச்சி ஏ-09 வீதியின் உமையாள்புரம் பகுதியில் பயணித்த
கனரக வாகனங்கள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் பொலிஸார் மற்றும் மோட்டார்
போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது வாகனங்களில் மேலதிகமான அலங்காரம் மற்றும் வாகனத்தின் இயங்கு நிலை
என்ன தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version