கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றத்தின் ‘இராவணாயணம் காண்டம் 01’ நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் பெருமையுடன் ஏற்பாடு செய்த ‘இராவணாயணம் காண்டம் 01’ நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் இலக்கியத்தைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் வெளியீடு, தனி நடனம், மெல்லிசை பாடல், வில்லுப்பாட்டு குறும்பட வெளியீடு உள்ளிட்ட பலதரப்பட்ட கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேறி பார்வையாளர்களைக் கவர்ந்தன.
நிகழ்வின் நோக்கம்
இந்த முக்கிய நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்,
தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்,
திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராஜா,
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ.கஜமுகன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழரின் கலை, இலக்கியம் மற்றும் விவாதத் திறனை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
