இலங்கை சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர் ஆன் நூல்களை மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புனித குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களே இவ்வாறு மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க அதனை இறக்குமதி செய்தவர் இணங்கியுள்ளதாக வெளிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித இதனை தெரிவித்துள்ளார்.
இந்த புனித குர்ஆன் நூல்கள், இலங்கை சுங்கத்திணைக்களத்தின் சுங்கச் சட்டங்களை மீறும் வகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த புனித குர்ஆன் நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த புனித குர்ஆன் நூல்களை மீண்டும் இந்தியாவிற்கே ஏற்றுமதி செய்வதற்கு குறித்த இறக்குமதியாளர் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புனித குர் ஆன் நூலின் உள்ளடக்கம் தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் கிடையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நூல்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விதம் தொடர்பில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புனித குர்ஆன் நூல்கள் சுங்கச் சட்ட விதிகளை மீறும் வகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த புனித குர்ஆன் நூல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்த இறக்குமதியாளர் அதனை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க இணங்கியுள்ளார் என அமைச்சர் விஜித தெரிவித்துள்ளார்.
