நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைய
வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை
அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது நாட்டு
மக்களின் கோரிக்கையாகும்.
பல வருடங்களாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு
வருகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல்
எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றிச் சிந்திக்காமல்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைய
வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய முக்கிய பொறுப்பு இந்த
அரசுக்கு உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
