Home சினிமா ராயன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

ராயன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

0

ராயன்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

தனுஷுடன் இணைந்து இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் இப்படத்திற்கு நேற்று சென்சார் நடைபெற்றுள்ளது. இதில் படம் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் இருப்பதால் ராயன் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளது.

படத்தில் சில காட்சிகளை நீக்கினால் U/A சான்றிதழ் தருகிறோம் என சென்சார் போர்டில் கூறியுள்ளனர்.

முதல் விமர்சனம்

ஆனால், படத்தில் எந்த காட்சியை வெட்ட வேண்டாம் நான் படத்தை பார்க்கிறேன், அதன்பின் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ராயன் படத்தை பார்த்த கலாநிதி மாறன், படம் நன்றாக வந்துள்ளது, சூப்பர் என தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

இதனால் படத்தில் எந்த காட்சியையும் வெட்டி தூக்க வேண்டாம், A சான்றிதழ் உடன் திரையரங்கிற்கு படம் செல்லட்டும், தொலைக்காட்சிக்கு தனி சென்சார் பண்ணிக்கலாம் என தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறினாராம்.

இதனால் தான் ராயன் படம் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/raayan-movie-first-review-1720585350

NO COMMENTS

Exit mobile version