Home இலங்கை அரசியல் வாக்கை பதிவு செய்த மலையக தலைமைகள் !

வாக்கை பதிவு செய்த மலையக தலைமைகள் !

0

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இரதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தனது தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

நுவரெலியாவில் (Nuwara Eliya) உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துள்ளார்.

வாக்களிப்பு நடவடிக்கைகள்

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் (Jeevan Thondaman) தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு
சாவடியில் தனது வாக்கினை அவர் பதிவு செய்துள்ளார்.

உள்ளூரட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/-_UrN9lTzJ4

NO COMMENTS

Exit mobile version