முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்து செல்வதுடன் கடலலை அதிகமாக
இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை
கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது கடலலையின் சீற்றம் அண்ணளவாக 10 அடிக்குமேல்
உயர்ந்து கடல் எது கரை என தெரியாத அளவுக்கு அதிகரித்து காணப்பட்டிருந்தது.
கடற்கரையின் சீற்றம்
ஆனால் தற்போது முன்னைய நாட்களை விட காற்றின் அளவும் மழையும் குறைவடைந்ததனால்
முல்லைத்தீவு கடற்கரையின் சீற்றம் சற்று குறைவடைந்து செல்வதுடன் கடலலை
கூடுதலாக இருக்கின்றது.
எனினும் தேவையற்ற வகையில் கடற்கரைக்கு செல்வதனை
இயன்றவரை தவிர்ப்பதும், தொழில் நிமித்தம் செல்லும் மீனவர்கள் அனர்த்த
முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
