Home இலங்கை சமூகம் தொடருந்து சேவைகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

தொடருந்து சேவைகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

0

நாட்டின் பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது.

கொழும்பு (Colombo) கோட்டையிலிருந்து இன்று (16) காலை திருகோணமலை (Trincomalee) நோக்கி பயணித்த தொடருந்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் தூக்கி வீசப்பட்ட விபத்தால் அந்த தொடருந்து தற்போது கம்பஹா (Gampaha) நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயக்கப்படும் தொடருந்துகள் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

மலையக மார்க்க தொடருந்துகள்

கனேமுல்ல – புலுகஹகொட தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த தொடருந்து கட்டுப்பாட்டாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, தலவாக்கலை மற்றும் வடகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டமையினால் மலையக மார்க்கத்தில் இயங்கும் தொடருந்து சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த தொடருந்தே நேற்று (15) இரவு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்து திணைக்களம்

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை செல்லும் தொடருந்துகள் ஹட்டன் தொடருந்து நிலையம் வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரை செல்லும் தொடருந்துகள் நானுஓயா தொடருந்து நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நிலையங்களுக்கு இடையில் பயணிகளை மாற்றுவதற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version