Home இலங்கை சமூகம் தற்காலிகமாக மூடப்படவுள்ள தொடருந்து கடவைகள்

தற்காலிகமாக மூடப்படவுள்ள தொடருந்து கடவைகள்

0

கம்பஹா (Gampaha) – ஜாஎல பிரதான தொடருந்து மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவை திருத்தப் பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த தொடருந்து கடவை எதிர்வரும் 28ஆம் திகதி காலை 8 மணி முதல் 29ஆம் திகதி மாலை 6 மணி வரை முற்றாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை

அத்துடன், கம்பஹா – ஜாஎல பிரதான தொடருந்து மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவை எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு தொடருந்து திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version