Home இலங்கை சமூகம் தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிக்கை

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிக்கை

0

முன்பதிவு செய்யப்பட்ட தொடருந்து இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு

ஜனவரி 1 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலை தொடருந்து நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடருந்து நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது மற்றும் பயணச்சீட்டைச் சரிபார்க்கும் போது பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version