Courtesy: kapil
வவுனியா மாவட்டத்தில் 2025 ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் 15ம் திகதி வரை 64 வீதமான
மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி
தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட மழைவீழ்ச்சி தொடர்பாக ஊடகவியாளரால் கேட்கப்பட்ட போதே இவ்வாறு
தெரிவித்திருந்தார்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம்
1300 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது.
சராசரி மழைவீழ்ச்சி
அந்தவகையில்
வவுனியா மாவட்டத்தில் ஜனவரி முதல் ஒக்டோபர் 15ம் திகதி வரையான
காலப்பகுதியில் 834.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வருகின்ற 77 நாட்களிற்குள் 465.7 மில்லி மீற்றர் அளவிலான
மழைவீழ்ச்சியே பதிவாகும் என மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்
தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண
மழையாகவே காணப்படும்.
நவம்பர் இறுதி, டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக
காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும்.
மேலும் இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலை ஏற்படும் பட்சத்தில் அதிகளவான மழை
வீழ்ச்சி ஏற்படுவதற்கான நிலைமை ஏற்படும் எனவும் கூறியிருந்தார்.
