Home இலங்கை சமூகம் மலையக பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மலையக பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

டிட்வா சூறாவளியுடன் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஏற்கனவே நிரம்பி வழிவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

பல இடங்களில் ஏற்கனவே நிலம் விரிசல் அடைந்து வருவதாலும், அடுத்த சில நாட்களில் கனமழை பெய்தால், மீண்டும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.

இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்

சமீபத்திய வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்.

நாளை முதல் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version