Home சினிமா டூரிஸ்ட் பேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு

டூரிஸ்ட் பேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு

0

டூரிஸ்ட் பேமிலி

2025ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாக டூரிஸ்ட் பேமிலி படம் உள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசி குமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே 1ம் தேதி இப்படம் ரிலீசானது.

இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்க கமலேஷ், ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர், பகவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஜயகாந்த் மகனுக்கு திருமணம்.. படைத்தலைவன் பிரஸ் ஷோவில் கூறிய சண்முகபாண்டியன்

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தை திரையுலகில் உள்ள பிரபலரும் பார்த்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். சூர்யா, சிவகார்த்திகேயன், நானி போன்ற நடிகர்கள் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்கள்.

பாராட்டிய ரஜினிகாந்த்

இந்த நிலையில், தற்போது டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து, படம் குறித்து பேசி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது எடுத்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..

NO COMMENTS

Exit mobile version