Home சினிமா வியாபாரம் அப்படினா இதுல, ரஜினியின் கூலி பட OTT ரைட்ஸ் இத்தனை கோடிக்கு பேசப்பட்டுள்ளதா?

வியாபாரம் அப்படினா இதுல, ரஜினியின் கூலி பட OTT ரைட்ஸ் இத்தனை கோடிக்கு பேசப்பட்டுள்ளதா?

0

வேட்டையன்

நாளை ரஜினி நடிப்பில் படு மாஸாக தயாராகியுள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ஜெய் பீம் பட புகழ் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் போலீஸ் கதைக்களத்தை மையமாக கொண்ட படம்.

இதில் ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என ஏராளமான பிரபலங்கள் நடிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார்.

ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

கூலி படம்

இப்படத்தை தொடர்ந்து ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நிலையில் இப்பட வியாபாரம் ஒருபக்கம் சூடு பறக்க நடந்து வருகிறது.

இந்த படத்தின் OTT உரிமையை ரூ. 175 கோடிக்கு மேல் கொடுத்து வாங்க நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் போட்டிபோட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/rajinikanth-coolie-movie-ott-rights-details-1728478985

NO COMMENTS

Exit mobile version