Home சினிமா 34 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த பட அப்டேட்

34 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த பட அப்டேட்

0

ரஜினிகாந்த் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வேட்டையன் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக கூலி படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு கூட்டணி அமைந்துள்ளது.

இரண்டு நாட்களில் மகாராஜா சீனாவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

34 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தளபதி. இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய இப்படம், இன்று வரை அனைவராலும் பாராட்டப்படுகிறது.

அடுத்த பட அப்டேட்

இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் – மணி ரத்னம் கூட்டணி இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் பிறந்தநாள் அன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. மணி ரத்னம் தற்போது கமலின் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version