Home சினிமா ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

0

வேட்டையன்

வருகிற அக்டோபர் 10ஆம் தேதி பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா, ரித்திகா சிங், ரக்ஷன், அபிராமி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வேட்டையன் படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதில் படத்தின் கதைக்களம் இப்படி தான் இருக்கப்போகிறது என அனைவருக்கும் ஒரு அனுமானம் கிடைத்துள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ புக்கிங்

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் கடந்த வாரம் துவங்கிய நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 1.6 கோடி வசூல் செய்துள்ளதாம் வேட்டையன் படம். ரிலீஸுக்கு முன் வேட்டையன் படம் ப்ரீ புக்கிங்கில் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/rajinikanth-vettaiyan-movie-pre-booking-box-office-1727345673

NO COMMENTS

Exit mobile version