Home இலங்கை அரசியல் ராஜிதவின் மகனுக்கு தேசிய பட்டியலில் இடம்: சஜித் மீது கடும் குற்றச்சாட்டு

ராஜிதவின் மகனுக்கு தேசிய பட்டியலில் இடம்: சஜித் மீது கடும் குற்றச்சாட்டு

0

எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), தனது மகன் சதுர சேனாரத்னவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் முதல் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க முன்வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கும் தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தீர்மானத்தை மீளப்பெறல் 

இதன்போது, ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக சஜித் பிரேமதாசவிடம் கூறிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாகவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

மேலும், ஜனாதிபதியோடு இணையும் தீர்மானத்தை மீளப்பெறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தம்மிடம் கோரியதாகவும், நாட்டு நலனுக்காக சிந்தித்து இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version