Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தல்: ரணில் பக்கம் சாய்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் பக்கம் சாய்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்

0

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், கொழும்பு (Colombo) ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நடைபெறவுள்ள வைபவமொன்றில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாளை (12) முதல் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ராஜித சேனாரத்ன

இந்த நிலையில், ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) நேற்று (11) களுத்துறை மாவட்டத்தில் தனது செயற்பாட்டாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

குறித்த நிகழ்வில். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார் என்பது குறித்த விபரங்களை அவர் கலந்துரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Source: https://ibctamil.com/article/rajitha-senaratne-to-support-to-ranil-1723445236

NO COMMENTS

Exit mobile version