Home சினிமா 8 நாட்களாக படுத்த படுக்கையாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத்.. என்ன நடந்தது?

8 நாட்களாக படுத்த படுக்கையாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத்.. என்ன நடந்தது?

0

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

கடைசியாக அவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

ஒர்கவுட்.. படுகாயம்

ரகுல் ப்ரீத் கடந்த அக்டோபர் 5ம் தேதி காலையில் அவர் ஒர்க்கவுட் செய்துகொண்டிருக்கும் போது 80 கிலோ deadlift செய்திருக்கிறார். அவர் அப்போது வயிற்றில் பெல்ட் எதுவும் அணியாமல் செய்ததால் முதுகில் spasm ஏற்பட்டு இருக்கிறது.

அதற்கு பிறகு கடும் வலியை பொறுத்துக்கொண்டு அவர் De De Pyaar De 2 படத்தின் ஷூட்டிங்கில் இரண்டு நாட்கள் பங்கேற்று இருக்கிறார்.

அதன் பிறகு பிசியோ சிகிச்சைக்கு சென்று இருக்கிறார்.

படுத்த படுக்கை

கடந்த அக்டோபர் 10ம் தேதி அவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு ஒரு மணி நேரம் முன்பு அவரது நிலை மோசமடைந்து இருக்கிறது.

அப்போது இருந்து அவர் படுத்த படுக்கையாக இருந்து வருவதாகவும், சிகிச்சை தீவிரமாக மருத்துவர்கள் அளித்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.

அவர் காயத்திற்கு பிறகு ரெஸ்ட் எடுக்காமல் ஷூட்டிங் சென்றது தான் அவர் உடல்நிலை மோசமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இன்று 8வது நாள் படுத்த படுக்கையாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு “Health is the biggest wealth” என்பதை தான் தற்போது புரிந்துகொண்டதாக கூறி இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/rakul-preet-injured-during-deadlift-workout-1729259123

NO COMMENTS

Exit mobile version