Home இலங்கை சமூகம் இறம்பொடையில் கோர விபத்துக்குள்ளான பேருந்து: ஆய்வு செய்யும் விசேட நிபுணர்கள் குழு

இறம்பொடையில் கோர விபத்துக்குள்ளான பேருந்து: ஆய்வு செய்யும் விசேட நிபுணர்கள் குழு

0

இறம்பொடை கரண்டியெல்ல பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் ஆய்வில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விபத்துக்குள்ளான பேருந்தை நேற்று (14) அரசு பகுப்பாய்வாளர் ஆய்வு செய்துள்ளார்.

கம்பளை பிரதான வீதியில் கொத்மலை – கரண்டியெல்ல பகுதியில் குறித்த பேருந்து கடந்த 11 ஆம் திகதி
பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில்
23 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version