Home இலங்கை அரசியல் ரணில் சொல்லப்போகும் இரகசியங்கள்.. அநுரவின் யாழ். விஜயத்தில் பேசப்படும் முக்கிய செய்தி

ரணில் சொல்லப்போகும் இரகசியங்கள்.. அநுரவின் யாழ். விஜயத்தில் பேசப்படும் முக்கிய செய்தி

0

பொது நிதியை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் 29ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

இவ்வாறு வைத்தியசாலையை விட்டு வெளியேறிய பின்னர் ரணில் முதலாவது ஊடக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த உரை குறித்து நாடளாவிய ரீதியிலும் அரசியல் தரப்புகளிலும் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. 

இந்நிலையில் அவரின் உரை எது சார்ந்திருக்கும் போன்ற முக்கிய விடயங்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ். விஜயம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆராய்கின்றது ஐபிசியின் அதிர்வு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version