முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் நாடளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குற்றபுலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரின் மோசமான உடல் நிலை காரணமாக சிறைச்சாலை வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இவ்வாறான பின்னணியில், அவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
