Home இலங்கை அரசியல் உதய கம்மன்பில கைது செய்யப்படுவதை தடுக்க பகீரத முயற்சி : ஓடித்திரியும் ஹெல உறுமய

உதய கம்மன்பில கைது செய்யப்படுவதை தடுக்க பகீரத முயற்சி : ஓடித்திரியும் ஹெல உறுமய

0

முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவை கைது செய்வதை தடுக்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அந்த கட்சி பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்றையதினம் இது தெடார்பாக ஹெல உறுமய தரப்பினர் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்்

அந்த வகையில் இன்றையதினம் மற்றுமொரு முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரணிலுடன் சந்திப்பு

 
அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வியாழக்கிழமை (செப்டம்பர் 4) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் பிவித்துரு ஹெல உறுமய மத்திய குழு உறுப்பினர்கள் குழுவை சந்தித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது வெளிநாட்டில் இருக்கும் தங்கள் தலைவர் உதய கம்மன்பிலவை தவறாக கைது செய்ய சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை தவறாக பயன்படுத்த முயற்சித்ததாக அவர்கள் விக்ரமசிங்கவிடம் விளக்கியுள்ளனர்.

இதேவேளைள உதய கம்மன்பில தற்போது தற்போது தாய்லாந்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version