Home இலங்கை குற்றம் பிரித்தானிய விஜயம் குறித்த செய்திகள் பிழையானவை

பிரித்தானிய விஜயம் குறித்த செய்திகள் பிழையானவை

0

தமது பிரித்தானிய விஜயம் தொடர்பில் வெளியான செய்திகள் பிழையானவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி பிரித்தானியாவின் வொல்வெர்ஹம்டன் பல்கலைகத்திற்கான விஜயம் தொடர்பில் ஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தாம், அரசாங்க பணத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் கொழும்பு கோட்டே நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க தனது துணைவியாரின் கலாநிதி பட்டக்கற்கை நெறிக்கான பட்டமளிப்பு விழாவிற்காக பிரித்தானியா சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை எனவும், விரையில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட உள்ளதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்று வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/ranil-denies-media-reports-on-his-uk-visit-1751015604

NO COMMENTS

Exit mobile version